பிரதமரே வந்தாலும் இதைத்தான் செய்வேன்! அமைச்சர் மகனிடம் சீறிய பெண்காவலர்! பின் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!

பிரதமரே வந்தாலும் இதைத்தான் செய்வேன்! அமைச்சர் மகனிடம் சீறிய பெண்காவலர்! பின் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ!



lady-police-argue-with-minister-son-video-viral

குஜராத் சூரத் நகரில் பெண் காவலர் சுனிதா யாதவ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மங்கள் செளக் என்ற பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது 5 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று மாஸ்க் எதுவும் அணியாமல் அத்துமீறி காரில் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய சுனிதா யாதவ் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். உடனே அந்த கும்பல் குஜராத்தை சேர்ந்த  சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானின் மகனான பிரகாஷ் கனானுக்கு போன் செய்தநிலையில் அங்கு விரைந்த பிரகாஷ் கனானி சுனிதாவிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் ஒரு கட்டத்தில் மிரட்டவும் துவங்கியுள்ளார். 

ஆனால் எதற்குமே அசராத சுனிதா கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வர உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த நேரத்தில் பிரதமர் மோடியே வந்தாலும் இப்படிதான் தடுத்து நிறுத்துவேன் எனக் கூறியுள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து அவர் தனது உயரதிகாரிக்கு போன் செய்து விவரங்களை கூறிய நிலையில் அவர் சுனிதாவை அந்த இடத்தில் இருந்து வெளியேறும்படி கூறியுள்ளார்.பின்னர் வேறுவழியின்றி அவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பெண் காவலர் சுனிதாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் அமைச்சரின் மகனுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது

இந்நிலையில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் சுனிதா தலைமை காவல் நிலையத்திற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.