ஊரடங்கால் நாள்தோறும் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் துயரங்கள்! வேதனையுடன் நடிகை குஷ்பு வெளியிட்ட வீடியோ!

ஊரடங்கால் நாள்தோறும் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் துயரங்கள்! வேதனையுடன் நடிகை குஷ்பு வெளியிட்ட வீடியோ!



kushboo-talk-about-migrant-workers

இந்தியாவில் கொரனோ வைரஸ் நாளுக்குநாள் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மே 31 வரை நான்காவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் வேலையில்லாமல், வருமானமின்றி தவித்த நிலையில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சாலைகளில் உணவு, தண்ணீர், இருப்பிடம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பீகார் மாநிலம் முசாபர் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் உணவின்றி உடல்நலம் பாதிக்கப்பட்டு தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தாய் இறந்தது கூட தெரியாமல் பச்சிளம் குழந்தை ஒன்று போர்வையை இழுத்து விளையாடி கொண்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

இந்நிலையில் நடிகை குஷ்பு புலம்பெயர் தொழிலாளர்கள் படும் சிரமங்களை குறித்து ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் #SpeakIupndia என்ற ஹேஷ்டேக்கில் ஒவ்வொரு நாளும் புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் 1000 கிலோ மீட்டர் உணவின்றி, தண்ணீரின்றி காலில் செருப்பின்றி நடந்து போகிறார்கள் அவர்களுக்காக பேசுங்கள். தாய் இறந்தது கூட தெரியாமல் பிளாட்பாரத்தில் கொஞ்சி விளையாடிய அந்த குழந்தைக்காக பேசுங்கள். கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வரும் மக்களுக்காக பேசுங்கள். ஊரடங்கில்  1200 கிலோமீட்டர் தனது தந்தையை சைக்கிளில் வைத்து ஓட்டிவந்த  அந்த 12 வயது சிறுமிக்காக பேசுங்கள். அரசியல் கட்சிகள் மட்டும் இந்தியா இல்லை. உணவின்றி கஷ்டப்படும் இந்த ஏழை மக்களும் இந்தியாதான் என பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.