"லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையை நாம் கெடுக்க வேண்டாம்" - சபரிமலை பற்றி குஷ்பு கருத்து!

"லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையை நாம் கெடுக்க வேண்டாம்" - சபரிமலை பற்றி குஷ்பு கருத்து!



kushboo about sabarimalai

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை அமல்படுத்துவோம் என கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது. 

கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். யாரும் தடுத்து நிறுத்தப்படமாட்டார்கள் என்று அறிவித்தது.

kushboo about sabarimalai

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மற்றும் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வதை அனுமதிக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தியவர்கள் கூறினார்கள்.இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. வருகிற 22-ந்தேதி வரை நடை திறந்திருக்கும்.

இதனால் முதல் நாளே 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அதிக அளவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நேற்று அதிகாலையில் இருந்தே சபரிமலைக்கு செல்லும் மலை அடிவாரமான நிலக்கல்லுக்கு இளம் பெண்கள் பல்வேறு வாகனங்களில் வரத் தொடங்கினர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் பம்பை மற்றும் சபரிமலை செல்லும் மலைப்பாதை நுழைவிடங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர். சபரிமலைக்கு வரமுயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர். இதனால், சில இடங்களில் தள்ளுமுள்ளு, தடியடி என அப்பகுதி பரபரப்பாக காட்சி அளித்தது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வன்முறையை தூண்டிவிட பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்கிறது என கேரள மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

kushboo about sabarimalai

இந்நிலையில் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயார் என தேவசம் போர்டு தலைர் பத்மகுமார் கூறினார். இந்நிலையில் இதனை பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பூ "லட்சக்கணக்கானோரின் நம்பிக்கையை நாம் கெடுத்துவிடக்கூடாது" என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் சபரிமலை பலரின் நம்பிக்கைக்கு உரிய தலம். ஆண் பெண் பாகுபாடு தேவையில்லை என்பதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு வலிமையான நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பலரின் மனதை நாம் புண்படுத்தக்கூடாது. ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் நாம் மதிக்க வேண்டும். எனவே அவரின் நம்பிக்கைக்கு எதிராக நாம் புரட்சி செய்வது நாகரீகமற்றது" என்று பதிவிட்டுள்ளார்.