டிக்கெட் எடுக்காமல் ஏசி வகுப்பில் ஓசி பயணம்: மிரட்டல் செயலில் இறங்கிய இரயில் பயணிகள்..!
கிழக்கு இரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான கும்பக் இரயில் சேவை, மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஹௌரா - உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் நகரங்களை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிவிரைவு இரயில் எண் 12369, திங்கள், புதன், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் இரண்டு மார்க்கத்திலும் தனது பயணத்தை மேற்கொள்கிறது. 26 மணிநேர தொடர் பயணத்தில், கும்பக் அதிவிரைவு இரயில் லக்னோ, பாட்னா, வாரணாசி ஆகிய முக்கிய வழித்தடங்களை இணைத்து பயணிக்கிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று அதிவிரைவு இரயிலின் ஏசி வகுப்பில், டிக்கெட் இல்லாத மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் பலரும் கூட்டமாக சேர்ந்து பயணித்து இருக்கின்றனர். ஏசி வகுப்பில் இருந்த பயணிகளை மிரட்டி, அவர்களின் இருக்கையை அகப்பரித்து பயணம் தொடர்ந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
A friend travelling in train 12369 shared this video of AC 2 coach hijacked by ticketless encroachers who are harassing passengers, occupying their berths, pulling chain. Passengers mostly senior citizens. Need immediate sanitation! @RailMinIndia @AshwiniVaishnaw @DrmDnr pic.twitter.com/YG4umtaeL2
— Akash K. Verma, IFS. (@verma_akash) December 9, 2023