கல்லூரி ஆண்டுவிழாவில் குறுக்கிட்ட மழையால் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி., 60 பேர் படுகாயம்.! கொச்சியில் சோகம்.!

கல்லூரி ஆண்டுவிழாவில் குறுக்கிட்ட மழையால் சோகம்: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி., 60 பேர் படுகாயம்.! கொச்சியில் சோகம்.!



Kochi University Annual Day Tragedy 4 Died 60 Injured Stampede 

 

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி பல்கலைக்கழகத்தில், நேற்று ஆண்டுவிழா நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டுவிழாவை பிரம்மாண்டமாக சிறப்பிக்க முடிவெடுத்த நிர்வாகத்தினர், இசைக்கச்சேரி மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

பாடகி நிகிதா காந்தியின் நேரடி இசைக்கச்சேரியும் நடைபெறவிருந்துள்ளது. திறந்தவெளி மைதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்வில், திடீர் மழை காரணமாக பலரும் அங்கிருந்து கல்லூரியை நோக்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், 60 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, கமலசேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களின் 4 மாணவர்கள் கவலைக்கிடமாகவும் இருக்கின்றனர். 2 நாட்கள் ஆண்டுவிழா கொண்டாட்டமாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்துள்ளன.

25ம் தேதியான நேற்று இசைக்கச்சேரி விழாக்களுக்கு 1500 பேர் அமரும் அரங்கத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருந்துள்ளது. பாதியளவு மாணவர்கள் வருகைதந்த நிலையில், திடீர் மழையால் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முயற்சித்துள்ளனர். பாடல் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே சோகம் நடந்து, நிகழ்ச்சி தடைபட்டது. 

கொச்சியில் நடந்த சோகம் காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள பிற கல்லூரிகளில் நடைபெறவிருந்த ஆண்டுவிழா உட்பட பிற நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.