இந்தியா

கொரோனா சமயத்தில் ஊருக்குள் புகுந்த 15 அடி நீள ராஜநாகம்! அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்!

Summary:

King copra in village

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நான்காவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கபட்டுள்ளது. இதனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.  

இந்தநிலையில், ஆந்திர பிரதேசத்தின் செருக்குப்பள்ளி பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் இருந்து 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று திடீரென வெளியேறி உள்ளது. அது, விசாகப்பட்டின மாவட்டத்தில் தம்மடப்பள்ளி என்ற கிராமத்திற்குள் புகுந்துள்ளது.  இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வன பாதுகாவலர்கள், உள்ளூர் பாம்பு பிடி வீரர் ஒருவர் உதவியுடன் அந்த பாம்பை பிடித்து, செருக்குப்பள்ளி வன பகுதியில் கொண்டு சென்று அந்த ராஜநாகம் விடப்பட்டது. இந்த வகை பாம்புகள் கடித்து விட்டால் அதில் இருந்து பிழைக்க மருந்து எதுவும் இல்லை என்ற காரணத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.


Advertisement