இந்தியா வர்த்தகம் சினிமா விளையாட்டு

கிரிக்கெட்டில் மட்டுமல்ல அதிலும் கோலி தான் முதலிடம்! எதில் தெரியுமா?

Summary:

kholi stays in top of brand celebrities list

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் கிரிக்கெட்டில் மட்டுமன்றி இந்தியாவில் அதிக மதிப்புடைய நட்சத்திரங்களின் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

2018 ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்திய அளவில் அதிக மதிப்புடைய முதல் 20 நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 170.8 மில்லியன் டாலர் மதிப்பில் முதலிடத்தில் உள்ளார். இவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்த இடத்தை தக்கவைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாலிவுட் சினிமா நட்சத்திரமான நடிகை தீபிகா படுகோன் 102.5 மில்லியன் டாலர் மதிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார். கடந்த ஆண்டைவிட இவர் ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

முதல் இரண்டு இடங்களில் இருக்கும் விராட் கோலி மற்றும் தீபிகா படுகோன் மட்டுமே இந்த பட்டியலில் 100 மில்லியன் டாலர் மதிப்பை தாண்டியுள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகர்களான அக்ஷய்குமார், ரன்வீர் சிங் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் முதல் 5 இடத்தில் உள்ளனர். கடந்த வருடம் இரண்டாம் இடத்தில் இருந்த ஷாருக்கான் இப்போது ஐந்தாவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

இந்த மதிப்பீடானது ஒவ்வொரு நட்சத்திரமும் எத்தனை நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி தலைசிறந்த 24 நிறுவனங்களுடன் 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருக்கும் தீபிகா படுகோன் 21 நிறுவனங்களுடன் ஒப்பந்தமாகியுள்ளார்.


Advertisement