இந்தியா

3 மகன்களை கொன்று தூக்கில் தொங்கிய தாய்.. மனமுடைந்த கணவரும் இப்போ தூக்குப்போட்டு சாவு

Summary:

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டநிலையில் தற்போது அவரது கணவரும் தற்கொலை செய்துகொண்டார்.

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டநிலையில் தற்போது அவரது கணவரும் தற்கொலை செய்துகொண்டார்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் வசித்துவந்தவர் ராமன்(42). இவருக்கு திருமணம் முடிந்து ரகனா (33) என்ற மனைவியும்,  இவர்களுக்கு ஆதித்யன் (13), அர்ஜூன் (11), ஆனந்த் (8) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக ரகனா கடந்த 7-ந் தேதி அன்று தனது மூன்று மகன்களுக்கும் விஷம் குடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் மரணத்திற்கு தான்தான் காரணம் என்ற மனஉளைச்சலில் இருந்துவந்த ராமன் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே அருகில் இருந்த ரப்பர் தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக குடும்பத்தில் இருந்த 5 பெரும் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...


Advertisement