Numerology: விஜய் விவாகரத்துக்கு இதுதான் காரணமா? தளபதி என கணித்தவர் சொல்வதை பாருங்க!!!
மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த மனைவி - வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை கொன்று அவர்களை தூக்கில் தொங்கவிட்டநிலையில் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த பெண் குழந்தைகளை தூக்கில் போடுவதற்கு முன் அவர்களுக்கு விஷம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் வேலைமுடிந்து வீடு திரும்பிய அந்த பெண்ணின் கணவன் வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் தூக்கில் தொங்கியவாறு இறந்துகிடப்பதை கண்டு கதறித்துடித்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரும் உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை அந்த பெண் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.