இந்தியா

லாட்ஜில் ரூம் போட்ட அகிலாவின் மரணமும், அவர் பற்றிய மர்மமும்..! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.!

Summary:

Kerala women Akila suicide case update

கேரளா மாநிலம் கன்னூரை சேர்ந்த அகிலா என்பவரின் மர்ம பக்கமும், அவரது திடீர் மரணம் குறித்த சம்பவமும் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகிலா. இவரது அப்பா மிகப்பெரிய பணக்காரராம். கோடிகளில் சொத்து, கட்டுக்கட்டாக பணம் என எப்போதும் மிகவும் வசதியான வாழக்கையே வாழ்ந்து வந்துள்ளார் அகிலா. இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களிலையே கணவருடன் தகராறு ஏற்பட முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் அகிலா.

அதன்பிறகு இரண்டாவது முறை வேறொரு நபரை திருமணம் செய்துகொண்ட அகிலா மூன்றே மாதத்தில் தனது இரண்டாவது கணவருடன் சண்டை போட்டுவிட்டு அவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பணம், 40 சவரன் நகை, கார் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

அதன்பிறகு அகிலா எங்கே போனார், என்ன ஆனார் என யாருக்கும் தெரியவில்லை. இப்படியே நாட்கள் சென்றநிலையில் அகிலா திடீரென மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

உறவினர்களை சந்தித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிய அகிலா அந்த பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கியிருந்திருக்கிறார். இந்நிலையில்தான் சம்பவத்தன்று அகிலா தனது அறையில் தூக்கு போட்டு சடலமாக தொங்குவதாக லாட்ஜ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர். அகிலா தலைமறைவான கடந்த 4 வருடமாக காசர்கோடு, கோழிக்கோடு, ஆலப்புழா இப்படி ஒவ்வொரு இடங்களாக சுற்றி வந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கார், 30 லட்சம் பணம், 40 சவரன் நகை ஆகியவருடன் தலைமறைவான அகிலா இந்த இடங்களுக்கு யாருடன் சென்றார்? ஏன் சென்றார்? எப்படி சென்றார்? அவரது பணம், நகை எல்லாம் என்ன ஆனது? என யாருக்கும் தெரியவில்லை. அகிலா அவரது உறவினர்களை சந்திக்கவரும் போது கூட அவரது கையில் நகை, பணம் எதுவுமே இல்லை என உறவினர்கள் கூறியுள்ளனர்.

தற்போது அகிலாவின் உறவினர்களிடம் இருந்து விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் அகிலாவின் மரணம் தற்கொலையா? கொலையா? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.


Advertisement