இந்தியா

மனைவியை மாற்றும் சர்ச்சை விவகாரம்.. விசாரணை மந்தம்., முக்கிய புள்ளிகள் தப்பிக்க அச்சாரம்.!

Summary:

மனைவியை மாற்றும் சர்ச்சை விவகாரம்.. விசாரணை மந்தம்., முக்கிய புள்ளிகள் தப்பிக்க அச்சாரம்.!

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம்பெண், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், தனது கணவர் அவரின் நண்பர்களோடு உல்லாசமாக இருக்க வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரின் கணவரை கைது செய்தனர். 

விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலமாக கேரளாவில் மனைவியை மாற்றும் கும்பல் செயல்பட்டு வருவது அம்பலமான நிலையில், இக்குழுவில் இணையும் நபர்களின் மனைவி மற்றொரு நபருடன் உல்லாசமாக இருக்கும் அந்தரங்க விடியோக்கள் பதிவு செய்து பின்னாளில் மிரட்டப்பட்டுள்ளனர். 

உல்லாச விடுதிகள், வீடுகள் என சத்தமே இல்லாமல் கொடூரம் நடந்து வந்த நிலையில், முதலில் கணவரின் வற்புறுத்தல் என சில பெண்கள் ஒத்துழைத்தாலும், பின்னாளில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணவரை விவாகரத்து செய்தும் சென்றுள்ளனர். சில பெண்கள் தொடக்கத்தில் ஒத்துழைத்தாலும், ஒரே நபர் அவருடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதால் விரக்தி ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு பல சர்ச்சைகள் நடந்து பெண்கள் பரிதவித்து வந்த நிலையில் புகார் விசாரணை தீவிரமெடுத்ததும் பகீர் சம்பவம் தெரியவந்தது. மேலும், சமூகத்தில் பெரிய அளவில் மரியாதையுடன் வாழ்ந்து வருபவர்கள், தொழிலதிபர்கள், வி.ஐ.பிக்கள் என பலரும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதும் அம்பலமானது.

20 குழுக்கள் மூலமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கி வந்த குழு உறுப்பினர்கள், சைபர் கிரைம் அதிகாரிகள் உதவியுடன் கண்டறியப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் கோவாவை சேர்ந்த பலரும் இடம்பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. கோட்டயம் பெண் கொடுத்த புகாரின் பேரில், அவரின் கணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்பின்னர் விசாரணை மந்தமான நிலையில், முக்கிய பிரமுகர்கள் வெளிநாடு தப்பி சென்றுள்ளனர். சிலர் தங்களை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க வழிதேடி, அதற்கான நடவடிக்கையை எடுப்பதால் விசாரணை மந்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவப்பெயர் வந்துவிடும் என புகார் அளிக்கவும் தயங்கி இருப்பதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 


Advertisement