இந்தியா

மனைவியை மாற்றி கொடுமை செய்த கும்பலுக்கு பேருதவி செய்த லாக்டவுன்.! அதிர்ச்சி தகவல்.!!

Summary:

மனைவியை மாற்றி கொடுமை செய்த கும்பலுக்கு பேருதவி செய்த லாக்டவுன்.! அதிர்ச்சி தகவல்.!!

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம், கருக்காச்சால் பகுதியை சார்ந்த பெண்மணி காவல் நிலையத்தில் தனது கணவரின் மனைவி மாற்றும் வன்முறை செயல் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரில், பெண்ணின் கணவர் அவரின் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இதற்கு மறுத்தால் கொலை செய்திடுவேன் என மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, காவல் துறையினர் பெண்ணின் கணவரை கைது செய்து விசாரணை செய்கையில், கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் செயல்படும் இரகசிய குழுக்கள் குறித்த தகவல் தெரியவந்தது. இந்த குழுவில் இடம்பெற்றவர்கள் மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசமாக இருந்த நிலையில், அக்குழுவில் பெண்ணின் கணவர் இணைந்து செயல்பட்டதும் தெரியவந்தது.

கேரளாவை மையமாக வைத்து செயல்பட்டு வந்த 20 குழுக்களில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருந்து வந்ததும் அம்பலமானது. குழுவின் உறுப்பினர்கள் பண்ணை வீடுகள், உல்லாச விடுதிகளில் ஒன்றுசேர்ந்து மனைவியை மாற்றும் கொடூரத்தை அரங்கேற்றி வந்துள்ளனர். முதலில் சில பெண்கள் இதற்கு ஒத்துழைத்தாலும், பின்னாளில் ஏற்பட்ட பாலியல் வற்புறுத்தலால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்கள் புகார் அளிக்காமல் இருக்க, அவர்கள் தனிமையில் இருக்கும் விடியோவை பதிவு செய்து மிரட்டிய கொடுமையும் நடந்துள்ளது. மேலும், சந்தேகம் ஏற்படாமல் இருக்க விருந்தின் போது 10 ஜோடி முதல் 20 ஜோடி வரை மட்டுமே வருகை தருவார்கள் என்றும் கூறப்படுகிறது. 

இந்த விருந்தில் முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவியுடன் கலந்துகொள்வதால், அவர்களின் உதவியுடன் கொடுமை நடந்து வந்துள்ளது. மேலும், கொரோனா கட்டுப்பாடு அமலில் இருந்த காலத்திலும் இந்த சர்ச்சை செயல் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கொரோனா கட்டுப்பாடுகளை இக்குழு உபயோகம் செய்து அபரீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே பொருளாதார சிக்கலில் சிக்கியிருந்த நேரத்திலும், இக்குழுவை தொடங்கியவர்கள் பணமழையில் வெவ்வேறு வகையில் வருமானம் பார்த்து நனைந்துள்ளனர். 


Advertisement