செல்போன் வெடித்து சிறுமி பலியான விவகாரத்தில், 7 மாதங்கள் கடந்து அதிர்ச்சி திருப்பம்.. விபரம் உள்ளே.!



Kerala Trissur minor Girl Died Mobile Blast Case 

 

கேரளா மாநிலத்தில் உள்ள திருசூர், திருவில்வமலை பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரின் மனைவி சௌமியா. தம்பதிகளின் மகள் ஆதித்ய ஸ்ரீ (வயது 8). 

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி சிறுமி செல்போன் உபயோகம் செய்துகொண்டு இருக்கும்போது, செல்போன் வெடித்து பலியானதாக கூறப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சிறுமியின் வீட்டில் தடயவியல் சோதனை நடத்தப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

KERALA

தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த சிறுமி பலியான நிலையில், 7 மாதங்கள் கழித்து சிறுமியின் மரணத்திற்கு செல்போன் வெடிப்பு காரணம் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. 

சிறுமி பயன்படுத்திய செல்போன் வெடிக்காத நிலையில், அவருக்கு அருகே இருந்த பன்றியை விரட்டப்பயன்படும் வெடிபொருள் வெடித்ததே மரணத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.