"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
8 வயது, 4 வயது சகோதரிகள் பலாத்கார வழக்கு; குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறை தண்டனை.! கேரளாவில் அதிரடி தீர்ப்பு.!
கேரளா மாநிலத்தில் உள்ள பதனாபுரம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி மற்றும் அவரின் 3 வயது தங்கை என இருவரும் வினோத் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் குற்றவாளியான வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விசாரணை அனைத்தும் நிறைவுபெற்று, இறுதி தீர்ப்பு நேற்று வாசிக்கப்பட்டது. குற்றவாளிக்கு இரண்டு வழக்கிலும் சேர்ந்து 204 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதாவது முதல் பலாத்கார குற்ற வழக்கில் 100 ஆண்டுகளும், அடுத்த குற்றவழக்கில் 104 ஆண்டுகளும் என 204 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.4.2 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 26 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.