இந்தியா General

சபரிமலை: பெண்களுக்கு ஆதரவான தீர்ப்பை எதிர்த்து பெண்களே போராட்டம்; ஸ்தம்பிக்கும் பந்தளம்..!!

Summary:

kerala protest against sambarimala

சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கானது உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என தீர்ப்பு வழங்கினார்.

இதனை எதிர்த்தும் ஆதரித்தும் பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த தீர்ப்பானது மதநம்பிக்கைக்கும், ஆசாரங்களுக்கும் எதிரானது என்ற கருத்து வலுத்து வருகிறது. கேரளாவில் பெண்கள் இதற்காக போராட்டம் நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய படம்

இதனைபோடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பந்தளத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பம்பை கணபதி கோயில் அருகே தொடங்கிய பெண்களின் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. 

'பெண்கள் வந்தால் நாங்களே தடுப்போம், சபரிமலை காப்போம், காத்திருக்க தயார்' உள்ளிட்ட வாசகங்களை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதலில் எல்லா பெண்களையும்அனுமதிக்கலாம் என கூறி வந்த சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட பெண்கள் பொங்கி எழுந்ததை கண்டு தங்கள் நிலைபாட்டை மாற்றி கொள்ள தொடங்கியுள்ளன.

ஐயப்பன் வளர்ந்த மண்ணான பந்தளத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டதனால் பந்தளம் நகர் ஸ்தம்பித்தது. தீர்ப்பை அமல்படுத்த துடிக்கும் கம்யூனிஸ்ட் அரசின் தலைமையும் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளது. பெண்களின் கோபம் ஓட்டு வங்கியை பாதிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய படம்

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி முதல் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு சிறப்பாக மேற்கொள்ளும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து இருக்கிறார். முதற்கட்டமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண் போலீசார் 500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.


Advertisement