இந்தியா

சொந்த வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வரவிருந்த ஏழை தொழிலாளி.! ஒரே நாளில் கோடீஸ்வரர்.! ஆச்சரிய சம்பவம்.!

Summary:

கேரளாவில் வாங்கிய கடனுக்காக வீட்டை இழக்கும் நிலையில் இருந்த ரப்பர் தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ 12 கோடி பரிசு விழுந்துள்ளது.

கேரள அரசு சார்பில் விழா காலங்களில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை நடத்தி, குலுக்கல் மூலம் பரிசு வழங்கப்பட்டுவருவது வழக்கம். அந்தவகையில் கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு 12 கோடி ரூபாய் முதல் பரிசுகொண்ட லாட்டரிகளை அம்மாநில அரசு விற்பனை செய்தது.

இந்தநிலையில், கேரளாவின் கைதாச்சல் கிராமத்தை சேர்ந்த போருண்ண ராஜன் என்பவர் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். ரப்பர் அறுக்கும் தொழிலாளியான இவருக்கு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பண்டிகை லாட்டரியில் ரூ. 12 கோடி பரிசு விழுந்தது. இதுகுறித்து ராஜன் கூறுகையில்,  வங்கியில் நான் வாங்கியிருந்த கடனை அடைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். எனது வீட்டை கூட பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்தநிலையில், தனக்கு லாட்டரியில் பரிசு விழ தன் வீட்டருகேயுள்ள முத்தப்பன் சாமிதான் காரணம் என்று கருதுகிறார். என் முத்தப்பன் அருளால் இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது. இந்த ஒற்றை லாட்டரியால் என் வாழ்க்கையே மாறிப் போனது என கூறியுள்ளார்.


Advertisement