இந்தியா

கடனில் இருந்தவருக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்! ஒரே லாட்டரியில் பல கோடிகளுக்கு அதிபதி.!

Summary:

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டனி ஜாய் என்ற 39 வயதான நபர் ஓமன் நாட்டில் கட்டுமான நிறுவனத்தில

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டனி ஜாய் என்ற 39 வயதான நபர் ஓமன் நாட்டில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த புதன் கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் நடத்திய லாட்டரி குலுக்கலில், ஆண்டனி ஜாய்க்கு 2 மில்லியன் திர்ஹாம்(இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், இதனை என்னால் நம்பவே முடியவில்லை. கனவு போல் இருக்கிறது. எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட்டம் கிடைத்துள்ளது. எனக்கு வங்கிக்கடன்கள் நிறைய உள்ளது. லாட்டரியில் கிடைத்த தொகை அந்த வங்கிக்கடன்களை அடைக்கவும், பெற்றோர்களை கவனித்து கொள்ள உதவும். 

இதில் வரும் பணத்தை சில தொண்டு நிறுவனங்களுக்கும் நன்கொடை அளிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். கடனில் இருந்த ஆண்டனி ஜாய்க்கு 10 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.


Advertisement