யாருப்பா இவரு? 300 கிலோ மரத்தை அசால்ட்டா தூக்கிகிட்டு நடந்த இளைஞர்!! வைரலாகும் வீடியோ..

யாருப்பா இவரு? 300 கிலோ மரத்தை அசால்ட்டா தூக்கிகிட்டு நடந்த இளைஞர்!! வைரலாகும் வீடியோ..


Kerala man lift 300 kg tree viral video

300 கிலோ எடைகொண்ட மரத்தை அசால்டாக தூக்கி நடந்த கேரளா இளைஞர் ஒருவரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பிரதீஷ் என்ற இளைஞர் 300 கிலோ எடைகொண்ட மரத்தை சுமார் 73 மீ தூரம்வரை தூக்கிச்சென்று அனைவரையும் அசரவைத்துள்ளார். சமீபத்தில் நடந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் பிரதீஷ் இந்த சாதனையை செய்துள்ளார்.

300 கிலோ எடைகொண்ட மரத்தை தனது தோளில் சுமந்தபடி அவர் நடந்துசெல்ல, அங்கிருந்த அனைவரும் அவரை உற்சாகப்படுத்துகின்றனர். சுமார் 73 மீ தூரம்வரை சென்ற பிரதீஷ் பின்னர் மரத்தை கீழே போடுகிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகவே, இவர்தான் உண்மையான பாகுபலி என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பாகுபலி படத்தில் பிரபாஸ் பெரிய சிவன் சிலையை தூக்கிச்செல்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.