அம்மாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மகன்; போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து திரும்பி வந்ததும் சோகம்.!



Kerala Kozhikode Mother killed by Son 

 

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் சுபைதா. இவரின் மகன் ஆஷிக். சுபைதா தற்போது மூளைக்கட்டி நோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தனது சகோதரியின் வீட்டில் தற்போது இருக்கிறார்.

மதுபோதைக்கு அடிமையான ஆஷிக், போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று, சமீபத்தில் தான் வீட்டிற்கு வந்துள்ளார். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தபோது, வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: மரக்கட்டையை இறக்கும்போது சோகம்; உடல் நசுங்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி.!

KERALA

மறுவாழ்வு மையத்திற்கு சென்று வந்து சோகம்

இந்நிலையில், ஆஷிக் மீண்டும் போதைப்பழக்கத்தை கையில் எடுத்த நிலையில், தனது தாயை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தார். பின் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். 

பொதுமக்கள் உடனடியாக ஆஷிக்கை பிடித்த நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சுபைதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஆஷிக் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். 
 

 

இதையும் படிங்க: கணவர் உயிரிழந்த சிலமணிநேரத்தில் மாரடைப்பால் மனைவி பலி; குடும்பத்தினர் கண்ணீர் சோகம்.!