மனைவியின் நடத்தையில் சந்தேகத்தீ.. பெட்ரோல் வாங்கி கணவன் பரபரப்பு செயல்.. பறிபோன உயிர்.!

மனைவியின் நடத்தையில் சந்தேகத்தீ.. பெட்ரோல் வாங்கி கணவன் பரபரப்பு செயல்.. பறிபோன உயிர்.!


Kerala Kollam Husband Killed Wife due to Affair Doubts

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம், சவரை பகுதியை சேர்ந்தவர் பினு (வயது 40). இவரின் மனைவி சரண்யா (வயது 36). இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பினு வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், சரண்யா சவரையில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பினுவுக்கு மனைவியின் மீது சந்தேகம் ஏற்படவே, அவ்வப்போது மனைவியிடம் இதுகுறித்து சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த பிப். 18 ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்தவர், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் கடந்த சில நாட்களாகவே சரண்யா நிம்மதியின்றி வாழ்ந்து வந்த நிலையில், நேற்று வெளியே சென்றவர் பெட்ரோல் கேனுடன் வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்த முயற்சித்துள்ளார். 

KERALA

பதற்றத்துடன் இருந்த சரண்யா தப்பி செல்ல முயற்சித்தும் பலனின்றி, பினு மனைவியின் உடலில் தீ வைத்துள்ளார். தீ கொளுந்துவிட்டு எரிந்த நிலையில் சரண்யா அலறி அங்கேயே விழுந்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சரண்யாவின் உடலில் எரிந்த தீயை அணைத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். 

மருத்துவர்கள் சரண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக சவரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பினுவை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர்.