காதலனுக்காக சமயலறையில் கஞ்சா செடி வளர்த்த காதலி : சட்னி அரைச்சி சாப்டுவாங்களோ?.. சிக்கிய ஜோடிக்கிளிகள்.!

காதலனுக்காக சமயலறையில் கஞ்சா செடி வளர்த்த காதலி : சட்னி அரைச்சி சாப்டுவாங்களோ?.. சிக்கிய ஜோடிக்கிளிகள்.!


Kerala Kochi Love Couple Plant Cubbins in Kitchen Police Arrest

சமையல் அறைக்குள் கஞ்சா செடி வளர்த்த காதலி மற்றும் அவரின் காதலன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வளர்த்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, ஆக்சனியா அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற காவல் துறையினர் சோதனை செய்தனர். 

அப்போது, தலையில் நீண்ட முடி மற்றும் தாடியுடன் இருந்தவரின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, சமயலறையில் கஞ்சா செடி வளர்ப்பது உறுதியானது. அதாவது, மென் பொறியாளர் ஆலன் தனது காதலி அபர்ணாவுடன் வசித்து வருகிறார். 

Kochi

இவர்கள் இருவரும் கடந்த சில மாதமாக வீட்டிற்கு உள்ளே சிறிய தொட்டியில் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளனர். தனது காதலனை மகிழ்விக்க காதலி இப்படியான செயலை செய்ததும் அம்பலமானது. 

மேலும், கஞ்சா செடி காற்றோட்டத்துடன் இருக்க 24 மணிநேரம் ஓடும் சிறிய அளவிலான மின் விசிறி, வெளிச்சத்திற்காக எல்.இ.டி பல்பு போன்றவற்றையும் ஜோடிக்கிளிகள் மாட்டிவைத்து சிக்கிக்கொண்டுள்ளது.