காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 25 வயது அக்காவுக்கு தங்கை செய்த கொடூரம்.. தீயில் கருகி கதறல்., பறிபோன உயிர்..!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 25 வயது அக்காவுக்கு தங்கை செய்த கொடூரம்.. தீயில் கருகி கதறல்., பறிபோன உயிர்..!


kerala-kochi-25-aged-sister-vismaya-kills-by-22-age-eld

தனது காதல் விசயத்திற்கு 25 வயது அக்கா எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அவரை கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி, வடபாரூர் பகுதியை சார்ந்தவர் விஸ்மாயா (வயது 25). இவரது சகோதரி ஜித்து (வயது 22). இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வீட்டில் இருந்த நிலையில், பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். 

அப்போது, திடீரென வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில், ஜித்து வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். வீட்டிற்குள் இருந்து புகை வந்த நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்க்கையில் விஸ்மயா கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். 

KERALA

பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், விஷ்மயா எரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

ஜித்துவிடம் இதுதொடர்பாக நடந்த விசாரணையில், "நான் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தேன், இந்த விஷயம் அக்கா விஸ்மயாவுக்கு தெரியவந்தது. அவர் எனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரை கொலை செய்தேன்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வடபாரூர் காவல் துறையினர் ஜித்துவை சிறையில் அடைத்தனர்.