சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
"டைவர்ஸ் கேட்ட பெண்ணுக்கு பாலியல் சீண்டல்..." நீதிபதி சஸ்பெண்ட்.!! கோர்ட் அதிரடி உத்தரவு.!!
கேரள மாநிலத்தில் விவாகரத்து வழக்கிற்காக நீதிமன்றம் வந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் உதயகுமார். இந்த நீதிமன்றத்தில் இளம் பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது நீதிபதி உதயகுமார், அந்த இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண் கொல்லம் மாவட்ட நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்ட நீதிபதி உதயகுமாரை வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! 27 வயது நபர் கைது.!!
இந்நிலையில் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நீதிபதியை சஸ்பெண்ட் செய்வதாக கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விவாகரத்து வழக்கிற்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "ம்ம்மா... எரியுதுமா விட்டுடு..." எரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.!! தாய் தற்கொலை.!!