இந்தியா

மின்கசிவால் பரிதாபம்... வீட்டில் உறங்கிய கணவன் - மனைவி பரிதாப பலி..! மகள் உயிர் ஊசல்..!

Summary:

மின்கசிவால் பரிதாபம்... வீட்டில் உறங்கிய கணவன் - மனைவி பரிதாப பலி..! மகள் உயிர் ஊசல்..!

அதிகாலை வீட்டில் தீ பிடித்ததில், சிகிச்சை  பலனின்றி கணவன் மற்றும் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியில் வசித்து வருபவர் ரவீந்திரன் (வயது 50). இவரது மனைவி உஷா (வயது 45). தம்பதிகளுக்கு ஸ்ரீதன்யா என்ற ஒரு மகள் உள்ளார். 

இவர்கள் வழக்கம் போல இரவு சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்ற நிலையில், அதிகாலை 2:30 மணியளவில் இவர்களது வீட்டில் தீயும், புகையும் வருவதை அக்கம்பக்கத்தினர் கண்டுள்ளனர்.

உடனடியாக இதுகுறித்து தொடுபுழா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இதனையடுத்து வீட்டில் சிக்கிய மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அங்கு அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருப்பினும் சிகிச்சை பெற்றுவந்த ரவீந்திரன் மற்றும் உஷா இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மகள் ஸ்ரீதன்யா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து எவ்வாறு தீ பிடித்தது? என்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து காவல்துறையினர் பல கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement