இந்தியா 18 Plus

இறந்த குழந்தையை புத்தக பையில் வைத்துக்கொண்டு அலைகிறேன்! பதற வைத்த மாணவி.

Summary:

Kerala college student hide baby in collage pack

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வாதிக்குடி என்னும் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவருடன் ஏற்பட்ட காதலில் அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்த நிலையில் அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துவந்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவி தனது வீட்டின் குளியலறையில் யாருக்கும் தெரியம் குழந்தை பெற்றெடுத்துள்ளார். குழந்தையை யாருக்கும் தெரியாமல் மறைப்பதற்காக பாலிதீன் பையில் சுற்றி தனது புத்தக பையில் வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தனது உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார். மாணவி கூறியதை நம்பாத உறவினர் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு  கூறியுள்ளார். குழந்தையை மாணவி புகைப்படம் எடுத்து வாட்ஸப்பில் அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து மாணவியின் பையை சோதித்ததில் குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது. தனக்கு 6 மாதத்திலையே குழந்தை பிறந்துவிட்டதாகவும், குழந்தை பிறக்கும்போதே இறந்தே பிறந்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.

மேலும், அந்த மாணவியின் காதலர் பற்றி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணின் காதலருக்கு சில மாதங்களுக்கு முன்னர் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்ததாகவும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, குழந்தை இறந்த நிலையில் இருந்ததால் மாணவி கொலை செய்தாரா அல்லது குழந்தை இறந்தே பிறந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், மாணவி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கண்காணிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement