கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் பரிசு! தேடி ஒட்டவைத்து ஓடிய ஆட்டோ டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் பரிசு! தேடி ஒட்டவைத்து ஓடிய ஆட்டோ டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!


Kerala auto driver rips winning lottery sheet

கேரளாவில் கிழித்து வீசிய லாட்டரி சீட்டு ஒன்றுக்கு 5 லட்சம் பரிசு விழுந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் செங்களா பகுத்தியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரானா மன்சூர் அலி. இவர் நெல்லிக்கட்டை டவுன் பகுதியில் ஆட்டோ ஓட்டிவருகிறார். இந்நிலையில் இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில் கேரளா அரசின் வின் வின் என்ற லாட்டரியில் 3 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்த லாட்டரி சீட்டிற்கான குலுக்கல் கடந்த 19 ஆம் தேதி நடைபெறுள்ளது. தான் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட மன்சூர் அலிக்கு நேற்று முன்தினம்தான் லாட்டரி சீட்டு வாங்கியது நினைவிற்கு வந்துள்ளது. உடனே செய்தித்தாள் ஒன்றை வாங்கி தான் வாங்கிய 3 லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதா என மேலோட்டமாக பார்த்துள்ளார்.

Lottery

மேலோட்டமாக பார்த்ததால் அவரால் அவரது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தனது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழவில்லை என நினைத்துக்கொண்டு தான் வாங்கிய மூன்று லாட்டரி சீட்டுகளையும் துண்டு துண்டாக கிழித்து வீசியுள்ளார்.

இந்நிலையில்தான் அந்த லாட்டரி சீட்டுகளை மன்சூர் அலியிடம் விற்பனை செய்த லாட்டரி ஏஜென்ட் ராமகிருஷ்ணன் என்பவர் லாட்டரியில் மன்சூருக்கு 5 லட்சம் பரிசு விழுந்தது குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மன்சூர் தான் கிழித்துப்போட்ட லாட்டரி சீட்டுகளை தேடி ஓடியுள்ளார்.

அந்த இடத்தில் சில துண்டுகள் கிடந்ததை அடுத்து, அதை பொருக்கி ஒட்டவைத்து காசர்கோடு மாவட்ட லாட்டரி துறை அதிகாரியை சந்தித்துள்ளார். ஆனால் கிழித்துப்போடப்பட்ட லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைப்பது கடினம் எனவும், ஒருவேளை லாட்டரி சீட்டில் உள்ள கியூ ஆர் கோடு வேலை செய்தால் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பரிசு வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மன்சூர். மன்சூரின் இந்த செயலை பார்க்கும்போது ஒரு படத்தில் நடிகர் கவுண்டமணி செய்த காரியம்தான் அனைவர்க்கும் நினைவில் வருகிறது.