வீடியோ காட்சிகள்: 191 பேருடன் கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக உடைந்து விபத்து.! மீட்பு பணிகள் தீவிரம்.!

வீடியோ காட்சிகள்: 191 பேருடன் கேரளாவில் ஏர் இந்தியா விமானம் இரண்டாக உடைந்து விபத்து.! மீட்பு பணிகள் தீவிரம்.!


Kerala Air india flight crash viral video

துபாய் நாட்டில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் இந்தியாவின் கேரளா மாநிலம் கோழிக்கோட் விமான நிலையத்தில் இன்று இரவு தரையிறங்கியபோது விபத்திற்குள்ளானது. தற்போது விமான விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் வேகமாக நடந்துவரும் நிலையில் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

துபாய் நாட்டில் இருந்து 174 பயணிகள், 2 விமானிகள் என மொத்தம் 6 விமானப்பணியாளர்கள் என மொத்தம் 191 பேருடன் புறப்பட ஏர் இந்தியா விமானம் இந்தியாவின் கேரளா மாநிலம் கோழிக்கோட் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்து விழுந்தது.

Kearala

விபத்தில் சிக்கி விமானி உயிரிழந்த நிலையில் துணை விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இதுவரை 14 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.