9 வயது சிறுவனுக்கு அத்தை கொடுத்த பாலியல் தொல்லை; வெளியான அதிர்ச்சி தகவல்.! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

9 வயது சிறுவனுக்கு அத்தை கொடுத்த பாலியல் தொல்லை; வெளியான அதிர்ச்சி தகவல்.!

நாட்டில் நாளுக்கு நாள் பெருகிவரும் குற்றங்களில் தற்போது பாலியியல் குற்றங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை நாம் மாணவிகள், இளம் பெண்கள், பெண்கள் ஏன் சிறுமிகளுக்கு கூட பாலியல் தொல்லை என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சற்று வித்தியாசமாக தற்போது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா தென்கிபள்ளம் பகுதியில் கடந்த ஒரு வருடங்களாக சுமார் 36 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் 9 வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மிகவும் பாதிப்படைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளார்.

அப்போது அந்த சிறுவன் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து மருத்துவர்களிடம் தெரிவித்த காரணம் அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. உடனடியாக மருத்துவர்கள் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், போலீசாருக்கும் கொடுக்கப்பட்ட தகவலின்படி மருத்துவமனைக்கு நேரடியாக வந்து சிறுவனிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த அந்தப் பெண்ணை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து குழந்தை நல அதிகாரிகள் கூறும் போது, கைது செய்யப்பட்ட பெண், பாதிக்கப்பட்ட சிறுவனை சுமார் ஒரு அண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது சிறுவனது மனநிலையை பெரிதும் பாதித்துள்ளது. சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வந்த பெண், அவனது சொந்த மாமாவின் மனைவி ஆவார். அவர் சிறுவன் வீட்டுக்கு அருகில் வசித்து வந்துள்ளார் என்று கூறினார்கள். 

இந்த விவகாரம் குறித்து பேசிய தென்கிபள்ளம் காவல் துறையினர், குழந்தை நல அதிகாரிகள் அளித்த அறிக்கையின் படி சிறுவன் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், சிறுவனின் பெற்றோருக்கும், சம்மந்தப்பட்ட பெண் வீட்டுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo