சாவுல கூட நியாயம் இல்ல.. கொலைநடுக்கும் சம்பவத்திற்க்காக பொங்கி எழுந்த கவின்!

சாவுல கூட நியாயம் இல்ல.. கொலைநடுக்கும் சம்பவத்திற்க்காக பொங்கி எழுந்த கவின்!


Kavin angry twit about Manisha Valmiki murder case

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்னும் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு பேரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது நாக்கு அறுக்கப்பட்டு, அந்த பெண்ணின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த இளம் பெண்ணிற்கு சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவசர அவசரமாக அந்த பெண்ணின் பெற்றோரின் சம்மதம் கூட இல்லாமல் போலீசார் அந்த இளம் பெண்ணின் உடலை தகனம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறிப்பிட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணை செய்ய அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் கவின் அவர்கள் "சாவில் கூட நியாயம் இல்லை" என்று ஆவேசமாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.