இந்தியா

காதல் தொல்லை.. பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய பயங்கரம்... பதறவைக்கும் சம்பவம்..!

Summary:

காதல் தொல்லை.. பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய பயங்கரம்... பதறவைக்கும் சம்பவம்..!

காதலிக்க மறுத்த பெண்ணின் மீது ஆசிட் வீசிய காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சுங்கத்கட்டே பகுதியில் நாகேஷ் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய ஒரு இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தன் காதலை பெண்ணிடம் கூறியபோது, அவர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் நாகேஷ் மிகவும் கோபமுற்றார். 

எனவே, தனது காதலை ஏற்க மறுத்த ஆவேசத்தில் இளம்பெண் மீது ஆசிட் பாட்டிலை எடுத்து வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை பிடிக்க முற்பட்டும் பிடிக்க இயலாமல் போன நிலையில், உடனடியாக பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை மேற்கொண்டு ஆசிட் அடித்தது நாகேஷ் தான் என உறுதி செய்தனர். 

மேலும், இந்த வழக்கில் நாகேஷை தேடி வந்த காவல்துறையினர், அவர் திருவண்ணாமலையில் ரமண மகரிஷி ஆசிரமத்திற்கு வந்து போவது தெரியவந்துள்ளது. எனவே, அங்கு மாறுவேடத்தில் சென்று நாகேஷை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement