திருட்டுப்பட்டம் கட்ட முயற்சித்த காவலர்கள்.. வீடியோ வெளியிட்டு 27 வயது இளைஞன் தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!

திருட்டுப்பட்டம் கட்ட முயற்சித்த காவலர்கள்.. வீடியோ வெளியிட்டு 27 வயது இளைஞன் தற்கொலை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!



karnataka-vijayapura-youngster-suicide-police-torture

காவலர்கள் செய்யாத குற்றத்திற்கு தன் மீது பழி சுமத்துகிறார்கள் என்று எண்ணி வேதனைப்பட்ட இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா, கோல்லாரா கிராமத்தில் வசித்து வருபவர் சோம்நாத் (வயது 26). இவர் விஜயபுரா நகரில் கார் பழுது பார்க்கும் நிலையத்தில் பணியாற்றுகிறார். சம்பவத்தன்று, கார் பழுது நீக்க காவல் உதவி ஆய்வாளர் சோமேஷ் கேஜ்ஜி என்பவர் வந்துள்ளார். 

அவரின் காரை பழுது பார்க்கும் சமயத்தில், காரில் அவர் வைத்திருந்த ரூ.1 இலட்சம் பணம் மாயமானதாக தெரியவருகிறது. இந்த பணத்தை சோம்நாத் திருடிவிட்டார் என்று கூறி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சோம்நாத்தை சோமேஷ் உட்பட 3 காவல் அதிகாரிகள் தாக்கியுள்ளனர். 

அதோடு மட்டுமல்லாது, ரூ.1 இலட்சம் பணத்தை தராவிட்டால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சோம்நாத், தனக்கு காவலர்கள் திருட்டுப்பட்டம் கட்ட முயற்சி செய்வதாக கூறி வீடியோ வெளியிட்டு கிருஷ்ணா நதியில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.