
பள்ளிகள் திறப்புக்கு பின் வெகுவாக கொரோனா அதிகரிப்பு... காற்றில் வீசப்படும் வழிகாட்டுதல்கள்.!
பள்ளிகளை திறந்த பின்னர், மாணவ - மாணவிகளிடையே கொரோனா பரவுதல் கர்நாடக மாநிலத்தில் அதிகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது வரை 4,145 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பள்ளிகளை திறந்த பின்னர் வெகுவாக அதிகாரித்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் பள்ளி, கல்லூரியில் பயின்று வரும் மாணவ - மாணவியர்கள் கொரோனாவால் அதிகளவு பதிக்கப்ட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களில் 19 வயது வரை உள்ள சிறார்களில் 679 பேர் கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 % குழந்தைகள் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக உள்ளனர். 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்கள் 656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி நிர்வாகங்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் கொரோனா வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் அதனை கண்டுகொள்வதும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், மாணவர்கள் சமூக இடைவெளி இன்றியும் தங்களின் விருப்பம் போல இருந்து வந்துள்ளனர். பள்ளி நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால், பள்ளி நேரம் முடிந்து வெளியே சென்றதும் மாணவர்கள் அனைத்தையும் மறந்துவிடுகின்றனர்.
பள்ளிகளில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழிகளில் பெரும்பாலும் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மாணவர்கள் பயணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கென தனி இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் எந்த விதமான கொரோனா தடுப்பு நடவடிக்கையை பெரும்பாலும் பின்பற்றுவது கிடையாது என்றும், பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றாத பட்சத்தில், கண்டித்து அவர்களுக்கு அறிவுரை கூறி அதனை செய்ய வைக்க இயலும்.
வீட்டிற்கு செல்லும் மாணவர்களிடம் கூட, முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளிவிட்டு பயணிக்க அறிவுறுத்தி அனுப்பி வைக்கிறோம். ஆனால், அவர்கள் பெரும்பாலும் அவ்வாறு செய்வது கிடையாது என்றும் ஆசிரியர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
Advertisement
Advertisement