தோட்டத்தில் உல்லாச வாழ்க்கை.. மாமரத்தில் நடந்த பயங்கரம்.. அதிர்ந்துபோன மக்கள்.. பரபரப்பு சம்பவம்.!



Karnataka Rama Nagar District 2 Affair Couple Suicide Death at Grove

உல்லாசமாக இருக்க சென்ற கள்ளக்காதல் ஜோடிகளிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்துகொள்ள, ஆணும் விசாரணை பயத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகர் மாவட்டம், மாகடி கூதூர் கிராமம் தாசேகவுடன தொட்டி கிராமத்தை சார்ந்தவர் புஷ்பலதா (வயது 25). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. புஷ்பலதாவுக்கும் - கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டு வந்ததால், கணவரிடம் இருந்து புஷ்பலதா புரிந்துள்ளார். 

பின்னர், தாசேகவுடன தொட்டியில் உள்ள பெற்றோரின் வீட்டில் புஷ்பலதா வசித்து வந்த நிலையில், மாகடி டவுன் பகுதியை சார்ந்த மோகன் குமார் (வயது 24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர், தாசேகவுடன தொட்டி கிராமத்தில் உள்ள கோழி கடையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த கடை புஷ்பலதா வீட்டின் அருகே இருந்துள்ளது. 

இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே இருவரும் கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்று அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினமும் வழக்கம்போல கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருக்க தோட்டத்திற்கு சென்றுள்ளது. அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

karnataka

இதன்பின்னர், வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்ட புஷ்பலதா, தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மோகன் குமார், தானும் அதே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரியவந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, கூதூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இருவரும் கள்ளக்காதல் தகராறில் மோகனால் புஷ்பலதா கொலை செய்யப்பட்டு, மோகன் தற்கொலை விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.