விளையாட்டு ஆர்வத்தில் பரிதாபம்.. ஐஸ்கிரீம் பிரீஸரில் கண்ணாமூச்சி.. 2 குழந்தைகள் பலி.. பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!

விளையாட்டு ஆர்வத்தில் பரிதாபம்.. ஐஸ்கிரீம் பிரீஸரில் கண்ணாமூச்சி.. 2 குழந்தைகள் பலி.. பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!


Karnataka Mysore 2 Child Died Hide and see Game Play Hide on Ice cream Freezer

கண்ணாமூச்சி விளையாடிய சிறுமிகள் விளையாட்டு மிகுதியில் பிரீஸரில் ஒளிந்து பலியான சோகம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், நஞ்சன்கூடு கிராமத்தில் வசித்து வருபவர் தேவம்மா. இவரின் கணவர் நாகராஜு சிக்கா. தம்பதிகளுக்கு பாக்யா என்ற 12 வயது மகள் இருக்கிறார். இதே பகுதியை சேர்ந்த ராஜா- கவுரமா தம்பதியின் மகள் காவியா (வயது 7). குழந்தைகள் இருவரும் தோழிகள் ஆவார்கள். 

இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தைகள் இருவரும் ஹனுமந்த நாயக்கா என்பவரின் ஐஸ்கிரீம் கடை அருகே விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், கண்ணாமூச்சி விளையாட்டு ஆர்வத்தில் ஐஸ்கிரீம் கடையில் உள்ள குளிர்சாதன பெட்டிக்குள் மறைந்துள்ளனர். 

அந்த சமயத்தில், எதிர்பார்த்த விதமாக பெட்டி பூட்டிக்கொள்ளவே, இருவரும் வெளியே வர இயலாமல் தவித்துள்ளனர். பெற்றோரும் மகள்களை காணவில்லை என நேரம் கழித்து தேடியுள்ளனர். இறுதியில், குழந்தைகளின் சடலம் மட்டுமே மீட்கப்பட்டது.

இருவரின் சடலத்தை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.