புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஜாதிமறுப்பு திருமணம் செய்தவர் சரமாரியாக குத்திக்கொலை.. அரங்கேறிய பயங்கரம்.!
இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலியை கரம்பிடித்தவர், மர்ம நபர்களால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி மாவட்டம், பஜார் பகுதியில் வசித்து வருபவர் ப்ரீத்தம் பண்ணக்கட்டி கவுடா (வயது 29). இவர் இளம்பெண்ணை காதலித்து, அவரின் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ப்ரீத்தத்திற்கும் - இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வெளியே சென்ற ப்ரீத்தம், மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து வந்துகொண்டு இருந்துள்ளார். அப்போது, ப்ரீத்தம்மை வழிமறித்த கும்பல், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. கத்திக்குத்து காயமடைந்த ப்ரீத்தம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ப்ரீத்தமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.