மேக்கப் போட்டு ஆவி பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை... பெண்களே மேக்கப் விஷயத்தில் கவனம்.!

மேக்கப் போட்டு ஆவி பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை... பெண்களே மேக்கப் விஷயத்தில் கவனம்.!


Karnataka Hassan Wedding Stooped Bride women Make Up goes wrong

 

திருமண மேக்கப் போட்ட பெண்மணி, வீட்டில் ஆவி பிடித்த சில மணிநேரத்தில் அவரின் முகமே அடையாளம் மாறிப்போன சோகம் நடந்து திருமணமும் கைவிட்டுப்போனது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம், அரிசிகெரெ பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிற்கும், வாலிபருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்த பெற்றோர், அதற்காக பேச்சுவார்த்தை நடத்தி திருமண தேதியை குறித்துள்ளனர். 

இந்த தம்பதிகளின் திருமணம் கடந்த 2ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணுக்கு மேக்கப் போட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள கங்கா அழகு நிலையத்திற்கு சென்று பெண்ணுக்கு மேக்கப் போட்டுள்ளனர். 

இதற்கிடையில், மேக்கப் போட்ட பெண்மணி வீட்டிற்கு வந்து இருந்த சமயத்தில், வெந்நீரில் ஆவி பிடித்ததாக தெரியவருகிறது. இதனால் அவரின் முகம் கருமை நிறமாக மாறியுள்ளது. பெண்ணின் முகம், கண்கள், கன்னம் வீங்கி காணப்பட்டது. 

karnataka

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் செய்வதறியாது திகைக்க, தகவலை அறிந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதுகுறித்த சம்பவம் காவல் நிலையம் வரை சென்று, விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நிபுணர்கள் தெரிவிக்கையில், மேக்கப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் கெமிக்கல்கள் இருக்கும். இவை காலாவதியாகி இருந்தாலும், அளவுக்கு அதிகமான மேக்கப் போட்டாலும், அதிகளவு கெமிக்கல் கலக்கப்பட்ட பொருட்களை உபயோகம் செய்தாலும் அதன் விளைவு இப்படி இருக்கும். அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினாலே அதற்கான காரணம் தெரியவரும் என கூறுகின்றனர்.