வரதட்சணை கொடுமையால் துயரம்.. புதுமணப்பெண் விஷம் ஊற்றி கொலை.. கணவன் & குடும்பத்தினர் வெறிச்செயல்.!

வரதட்சணை கொடுமையால் துயரம்.. புதுமணப்பெண் விஷம் ஊற்றி கொலை.. கணவன் & குடும்பத்தினர் வெறிச்செயல்.!



karnataka-chikmagalur-woman-killed-by-husband-due-to-do

திருமணத்தின் போதே பெண் வீட்டார் சார்பாக வரதட்சணை கொடுத்த நிலையில், கணவன் மேற்படி வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை செய்து குடும்பத்தோடு விஷம் ஊற்றி கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் மாவட்டம், முடிகெரே காரெபைலு கிராமத்தை சேர்ந்தவர் நந்தீப் (வயது 30). என்.ஆர் புரா பன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் கானவி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2021 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போதே பெண் வீட்டார் சார்பாக வரதட்சணையாக நகை மற்றும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 

திருமணம் முடிந்த பின்னர் புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதமாக மனைவி கானவியிடம் சந்தீப் கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன கானவி பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், அவர்கள் சமாதானம் செய்து கணவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

எத்தகைய விஷயங்களையும் கருத்தில் கொள்ளாத நந்தீப், மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதனால் கானவியின் பெற்றோர் ரூ.2 இலட்சம் பணம் கொடுத்த நிலையில், நந்தீப் மேலும் பணம் கேட்டு இருக்கிறார். இவரின் கொடுமைகளுக்கு நந்தீப்பின் பெற்றோர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக நந்தீப் தனது பெற்றோருடன் சேர்ந்து மனைவியின் கை, கால்களை பிடித்து வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

karnataka

இதனால் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர். அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக, மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்துள்ளனர். அங்கு அவருக்கு விஷத்தை ஊற்றிவிட்டோம் என்ற உண்மையை கூறாமல் இருக்கவே, மருத்துவர்களும் உண்மை தெரியாததால் சாதாரண சிகிச்சையை அளித்துள்ளனர். இறுதியில் கானவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மகளின் இறப்பை அறிந்த பெற்றோர், கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நந்தீப், அவரின் பெற்றோர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சமப்வம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.