விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
அதிவேகத்தில் தனியார் பேருந்து.. சாலையோரம் சென்ற 3 பேர் பரிதாப பலி.. துடிதுடித்து மரணம்.!
சாப்பிட்டுவிட்டு சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், 3 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபள்ளாபூர், ஹென்னெனஹள்ளி பகுதியில், நேற்று காலை 10 மணியளவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கத்திரி கிராமத்தை சேர்ந்த கவுஸ் மற்றும் அமேஜான் மற்றும் இன்னொருவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தனர்.
இவர்கள் மூவரும் உணவகத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளனர். பின்னர், வாகனத்தை எடுக்க மூவரும் சென்றபோது, சிக்கபள்ளாபூரில் இருந்து பாகேபள்ளிக்கு வந்த தனியார் பேருந்து 3 பேரின் மீது மோதி நின்றுள்ளது.
இந்த விபத்தில், 3 பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிக்கபள்ளாபூர் காவல் துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.