ஊனமுள்ள பிள்ளையை பெத்துட்டியே.. கணவனின் சித்ரவதையால், மகனை கொன்று தற்கொலை செய்த தாய்.!

ஊனமுள்ள பிள்ளையை பெத்துட்டியே.. கணவனின் சித்ரவதையால், மகனை கொன்று தற்கொலை செய்த தாய்.!


Karnataka Belagavi Yelagodu Mother Kills Son and Commit Suicide due to Husband Torture

யழகோடு அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகன் மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலையில், கணவனின் அனுதின தொல்லைகள் தாளாது தாய் மகனை கொலை செய்து, தன்னுயிரையும் மாய்த்துக்கொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி, யழகோடு யரகட்டே கிராமத்தை சேர்ந்தவர் பெல்லப்பா. இவரின் மனைவி சேவந்தி பியாடி (வயது 32). இந்த தம்பதிகளுக்கு மாந்தேஷ் என்ற 12 வயது மகன் இருக்கிறார். சிறுவன் மாற்றுத்திறனாளி ஆவார். 

இதனால் கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஊனமான பிள்ளையை பெற்றெடுத்துவிட்டாய் என மனைவியை கணவர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

மேலும், வேறொரு திருமணம் செய்யப்போவதாகவும் தொல்லை கொடுத்து வந்த நிலையில், சேவந்தி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். கணவருடன் அனுமதினமும் போராட்டம் என வாழ்க்கை நகர்ந்து வந்துள்ளது. 

karnataka

ஒருசமயத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சேவந்தி, மகனை கொலை செய்து நாம் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற விபரீத எண்ணத்திற்கு சென்றுள்ளார். கிராமம் அருகே உள்ள ஏரிக்கு மகனுடன் நேற்று சென்ற சேவந்தி, மகனை ஏரியில் வீசி கொலை செய்து தானும் ஏரியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள யழகோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாந்தேஷ், சேவந்தியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.