இந்தியா

அசுரவேக பயணத்தில் சேஸிங்.. கார் - லாரி மோதிய விபத்தில், அப்பளமாக நொறுங்கிய சோகம்.. 4 பேர் பலி.!

Summary:

அசுரவேக பயணத்தில் சேஸிங்.. கார் - லாரி மோதிய விபத்தில், அப்பளமாக நொறுங்கிய சோகம்.. 4 பேர் பலி.!

லாரி - கார் அடுத்தடுத்து மோதி  விபத்திற்குள்ளானதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில், நகரின் வெளிப்புறம் வழியாக எளிதில் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் நைஸ் ரோடு (Nice Road) என்ற தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக பெங்களூர் நகருக்குள் பயணம் செய்யாமல், எளிதில் பிற ஊர்களுக்கு செல்ல முடியும். 

இந்நிலையில், நேற்று இரவு நைஸ் ரோட்டில் உள்ள பூர்வங்கரா அடுக்குமாடி குடியிருப்பு அருகே காரும் - கனகர லாரியும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இரண்டு வாகனங்களும் வேகமாக சென்று கொண்டு இருந்த நிலையில், முந்தி செல்லும் போது விபத்து நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 பேர் உயிரிழந்த நிலையில், 6 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், காரில் பயணம் செய்தவர்கள் யார்? எங்கிருந்து எங்கு சென்றுகொண்டு இருந்தார்கள்? உயிரிழந்தவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement