இந்தியா

எவன் கூட சிரிச்சுச்சிரிச்சு பேசுற?.. கணவனின் கொலைவெறித்தனம்.. இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்த மனைவி.!

Summary:

எவன் கூட சிரிச்சுச்சிரிச்சு பேசுற?.. கணவனின் கொலைவெறித்தனம்.. இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்த மனைவி.!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று கொடூரமாக மனைவியை படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ராமமூர்த்தி நகர் சன்னாசந்திரா பகுதியை சேர்ந்தவர் தேஜ் பகதூர் (வயது 48). இவரின் மனைவி கமலா தேவி (வயது 40). தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தேஜ் பகதூரின் சொந்த நாடு நேபாளம் ஆகும். பிழைப்புக்காக பெங்களூர் வந்தவர் இங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். 

இவர் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகவும் பணியாற்றி வந்துள்ளார். கமலாதேவி தனது செல்போனில் யாரிடமோ சிரித்து பேசி வந்ததாக தெரியவருகிறது. இது, தேஜ் பகதூருக்கு மனைவியின் நடத்தையில் மாற்றம் இருப்பதாக சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக நேற்று இருவருக்கும் சண்டை ஏற்படவே, ஆத்திரமடைந்த தேஜ்பகதூர் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கமலாதேவி, பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராமமூர்த்தி நகர் காவல் துறையினர் தேஜ் பகதூரை சிறையில் அடைத்தனர். 


Advertisement