தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
லிவிங் டுகெதர் காதலியை, அவரின் தோழிக்காக அடித்தே கொன்ற பயங்கரம்... ஓராண்டு காதல் நொடியில் மறந்த சோகம்.!
தன்னுடன் வாழ்ந்து வரும் லிவிங் டுகெதர் காதலியை, அவரின் தோழியாக கயவன் அடித்தே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில், நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ் தமி - கிருஷ்ண குமாரி ஆகியோர் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, கடந்த ஓராண்டாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், காதலி இருக்கும்போதும் சந்தோஷ் பல பெண்களோடு தொடர்பை ஏற்படுத்தி உல்லாசமாக இருந்து வந்துள்ளான். கிருஷ்ண குமாரியின் தோழிக்கும் காதல் வலைவீசி தொந்தரவு செய்திருக்கிறான். இந்த விஷயம் கிருஷ்ண குமாரிக்கு தெரியவரவே, அவர் வீட்டிற்கு சென்று சந்தோஷிடம் சண்டையிட்டுள்ளார்.
கிருஷ்ண குமாரி வீட்டிற்கு சென்றபின்னர், அவரின் தோழிக்கு லைவ் வீடியோ வந்துள்ளது. அதில், கிருஷ்ண குமாரியை சந்தோஷ் கடுமையாக தாக்கி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்டு பதறிப்போன தோழி, கிருஷ்ணகுமாரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
உயிருக்கு போராடிய கிருஷ்ண குமாரியை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தும் பலனில்லை. பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சந்தோஷ் தமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.