உலகத்தரத்தில் பீட்சா செய்கிறோம், தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை உறுதி - டாமினோஸ்..!

உலகத்தரத்தில் பீட்சா செய்கிறோம், தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை உறுதி - டாமினோஸ்..!


karnataka-bangalore-dominos-pizza-issue-authority-expla

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் டாமினோஸ் உணவகத்தில் தயாரிக்கப்பட்ட பீட்சா மாவுக்கு அருகிலேயே கழிவறையில் உபயோகம் செய்யப்படும் மாப் மற்றும் பிரஸ் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பீட்சா பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே உணவகங்களில் உணவுகள் தரக்குறைவாக தயாரிக்கப்பட்டுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், சில இடங்களில் தரக்குறைவான உணவால் உயிரிழப்பும் நடக்கிறது. இந்த சமயத்தில் மேற்கூறிய சம்பவம் பெரும் அதிர்வலையை உணவு பிரியர்களிடையே ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இது குறித்த புகைப்படத்திற்கு விளக்கம் அளித்துள்ள டாமினோஸ் நிறுவனம், "உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய உலகத்தரம் வாய்ந்த நெறிமுறைகளை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். அந்த விதிமுறைகள் மீறப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இது குறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.