8 அழகிகளுடன் ஒன் மேனாக பேங்க் மேனேஜர்.. அழகிகளுக்காக 5 கோடி கடன் மோசடி.. அதிகாரிகளை கிறங்கடித்த வாக்குமூலம்.!

8 அழகிகளுடன் ஒன் மேனாக பேங்க் மேனேஜர்.. அழகிகளுக்காக 5 கோடி கடன் மோசடி.. அதிகாரிகளை கிறங்கடித்த வாக்குமூலம்.!


karnataka-bangalore-bank-manager-forgery-for-8-prostitu

வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் டேட்டிங் செயலுக்கு அடிமையாகி 8 அழகிகளுக்காக 5 கோடி மோசடி செய்து சிறைக்கு சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் அனுமந்தகரில் உள்ள தேசிய வங்கியில் மேலாளராக பணியாற்றுபவர் ஹரிசங்கர். இவர் கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது வங்கி கிளையில் பெண்ணொருவர் ரூ.1 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்திருந்த நிலையில், அக்கணக்கு பெயரில் முறைகேடு செய்து ரூ.5.70 கோடி அளவில் கடன் பெற்றுள்ளார். 

இந்த விஷயம் பெண்மணிக்கு தெரியவரவே, அவர் அனுமந்த நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது, வங்கி மேலாளர் இளம்பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார். அவருக்கு பணம் தேவைப்பட்ட காரணத்தால் ரூ.5.70 கோடி கடன் பெற்று கொடுத்து மோசடி செய்துள்ளார். 

karnataka

அதாவது, ஹரி சங்கரின் மனைவிக்கு குழந்தை பிறந்து கேரளாவில் உள்ள நிலையில், டேட்டிங் செயலுக்கு அடிமையாகி அதன் மூலமாக பெண்களை வீழ்த்தியுள்ளார். ஒரு கட்டத்தில் 8 பெண்களிடமும் பேசி மொத்தமாக அவர்களுடன் உல்லாசமாக இருந்து, மோசடி செய்து பெற்ற ரூ.5.70 கோடியை சமமாக பிரித்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர், மோசடி பணம் என்று தெரியாமல் உல்லாசமாக இருந்த அந்த அழகிகளுக்கும் வலைவீசியுள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.