இந்தியா லைப் ஸ்டைல்

கலவரத்தில் பிரிந்த மனைவியை 72 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கணவனின் நெகிழ்ச்சியான தருணங்கள்.!

Summary:

karala - kannur - husbend and wife after 72 years meeting

விவசாய போராட்டத்தின்போது மனைவியை பிரிந்த கணவர் 72 ஆண்டுகளுக்குப் பிறகு 
சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

1946 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கண்ணூர் அருகே கவும் பாயி என்ற பகுதியில் விவசாயிகளின் தீவிர போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் நாராயணன் நம்பியாரின் தந்தை.

ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து கலவரமாக மாறியது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசாருக்கு பிடிபடாமல் இருக்க நாராயணனும் அவரது தந்தையும் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர்.

ஒருநாள் போலீசாரின் பிடியில் சிக்கிய இருவரையும் போலீசார் சரமாரியாக சுட்டனர். இதில் அவரது தந்தை உயிரிழந்தார், நாராயணன் உடலில் 22 குண்டுகள் தொலைக்கப்பட்ட நிலையில் உயிர் பிழைத்தார். இந்நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு 1950ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டு 1957 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் முன்பே அவருக்கு 17 வயதில் திருமணம் நடைபெற்றிருந்தது. சிறை சென்றவுடன் அவரது மனைவி சாரதா இருந்த வீட்டை போலீசார் எரித்துள்ளனர். இதனால் அவரது உறவினருடன் வெளியூருக்கு சென்று விட்டார்.

இருவரும் சந்திக்க முடியாத சூழ்நிலையில் வேறு வேறு திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் சாரதாவுக்கு திருமணமாகி ஆறு பிள்ளைகள் உள்ளனர். அவரது கணவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.

சமீபத்தில் நாராயணன் உறவினருடன் சாரதா மகன் பார்க்கவன் எதேச்சையாக சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது தனது குடும்ப தகவலை பகிர்ந்துள்ளார். அதன் பிறகு அவர்கள் இருவரின் மூலம் 72 ஆண்டுகளுக்குப் பிறகு நாராயணனும் சாரதாவும் தமது உறவினர்களுடன் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.


Advertisement