அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
நீ எனக்கு மட்டும் தான்! முன்னாள் காதலியிடம் வலுக்கட்டாயமாக அத்துமீறிய காதலன்! அடுத்த நொடி அந்த பெண்ணின் துணிச்சல்.... அதிர்ச்சி சம்பவம்!
பெண்கள் மீது நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ள போதிலும், கான்பூரில் நடந்த இந்த சம்பவம் மீண்டும் பாதுகாப்பு விவாதத்தை தூண்டியுள்ளது. பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றிய தைரியம் தற்போது பேசுப்பொருளாகி வருகிறது.
காதல் தோல்வி காரணமாக மனஉளைச்சல்
உத்தரபிரதேசம் கான்பூரை சேர்ந்த 35 வயதான சம்பி என்பவர், ஒருபெணை காதலித்து வந்ததாக தகவல். ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தாரகள் வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் சம்பி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தோட்ட வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண்ணை! முருகன் என்ற நபர் காட்டுக்குள் தூக்கிச் சென்று.....தூத்துக்குடியில் நடந்த கொடூரம்!
பெண்ணை பின்தொடர்ந்து தாக்க முயற்சி
அந்த பெண் தனியாக சென்றுகொண்டிருந்த போது, சம்பி அவளை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அவர் அந்த பெண்ணின் கையைப் பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலவந்தமாக தாக்கி அவளை முத்தமிட முயன்றதும் தகவல்.
பெண்ணின் தைரியம்
தாக்குதலில் போது தன்னை பாதுகாக்க, அந்த பெண் சம்பியின் நாக்கை கடித்து தப்பிக்க முயன்றுள்ளார். கடும் வலியால் சம்பி அலறியதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்துள்ளனர். சம்பவத்தை அறிந்த பெண்ணின் குடும்பத்தாரும் அங்கு வந்து உதவி அழைத்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
நாக்கில் தீவிர காயத்துக்கு உள்ளான சம்பியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், பெண்கள் தன்னார்வத் தற்காப்பு திறன்களை அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும், சமூக பாதுகாப்பு குறித்து மேலும் பல நடவடிக்கைகள் தேவை என்பதையும் வலியுறுத்துகிறது.