ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் உட்பட 5 பேர் சூரசம்ஹாரம்.. ஜம்முவில் இந்திய இராணுவம் அதிரடி.!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் உட்பட 5 பேர் சூரசம்ஹாரம்.. ஜம்முவில் இந்திய இராணுவம் அதிரடி.!


JK Pulwama Jaish E Mohammad Terror Commander Including 5 Terrorist Encounter 12 Hrs Operation

கடந்த 12 மணிநேரத்தில் பாகிஸ்தான் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புட்காம் மற்றும் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையானது பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்டது. அப்போது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கமாண்டர் ஜாஹித் வானி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஏ.கே 56 ரக துப்பாக்கி, பயங்கர ஆயுதம், வெடிபொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

jammu kashmir

இதனைப்போல, பல்வேறு பகுதிகளில் நடந்த 11 என்கவுண்டரில் மொத்தமாக 5 பேர் 12 மணிநேரத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தானை சேர்ந்த 8 பயங்கரவாதிகள் உட்பட 21 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.