கணவனை அடித்துப்போட்டு கர்ப்பிணி பெண் 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; காமவெறி கும்பல் அட்டகாசம்.!!Jharkhand 6 Man Team Gang Raped a Pregnant Girl

கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்ல முயன்ற கர்ப்பிணி பெண், 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. நொடிபொழுது ஆத்திரத்தால் ஊருக்கு புறப்பட பெண்மணிக்கு நடுவழியில் நடந்த சோகம் குறித்து விவரிகரித்து இந்த செய்தித்தொகுப்பு.z

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமு மாவட்டம், படான் பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கர்ப்பிணி ஆவார். கடந்த சனிக்கிழமையின் போது மாமியார் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் கோபித்துக்கொண்டு தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது, அவரை தேடி கணவர் மற்றும் உறவினர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்குள்ள பலுவாகி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மனைவியை நிறுத்தி கணவர் சமாதானம் செய்துகொண்டு இருந்துள்ளார். அச்சமயத்தில், அங்கு வந்த 6 பேர் கும்பல் கணவர் மற்றும் உறவினரை தாக்கிவிட்டு கர்ப்பிணி பெண்ணை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளது. 

Jharkhand

அங்கு வைத்து பெண்ணை 6 பேர் கும்பல் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், காம கூட்டம் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. மனைவியை மீட்க சென்ற கணவர் மயங்கி இருந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார். 

மேலும், இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து 6 பேர் கும்பலை அதிரடியாக கைது செய்தனர். கர்ப்பிணி பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமணியல் சிகிச்சை பெற்று வருகிறார்.