தகாத உறவு குற்றமில்லை என தீர்ப்புவழங்கிய நீதிபதியின் மனைவிக்கு அதை பார்சல் செய்துள்ளனர்!.

தகாத உறவு குற்றமில்லை என தீர்ப்புவழங்கிய நீதிபதியின் மனைவிக்கு அதை பார்சல் செய்துள்ளனர்!.



jasmine and halva parcel to judge wife


திருமணமான பந்தத்தை தாண்டி ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே தகாத உறவு கொண்டால் அது  கிரிமினல் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விழுப்புரத்தில் இந்து முன்னணி மாநில அமைப்பு தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் நிர்வாகிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு மல்லிகைப்பூ மற்றும் அல்வாவை தபால் மூலம் அனுப்பிவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Court order

மல்லிகைப்பூ, அல்வாவை பார்சல் செய்து, அதை அனுப்புவதற்காக தபால் நிலையத்துக்குள் சென்றனர். இதை அறிந்த விழுப்புரம் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பார்சல் அனுப்ப முயன்ற இந்து முன்னணி மாநில அமைப்பு தலைவர் ஆசைத்தம்பி  மற்றும் பல நிர்வாகிகளை கைது செய்தனர். 

இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த பார்சலை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.