தமிழகம் இந்தியா

ரயில்வேயில் இவ்ளோ காலியிடங்களா வேலை உறுதிதா போல யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.!

Summary:

indian railway - recrutment - 1.30 vacances

ரயில்வே துறையில் தொழில் நுட்பம் சாராத 1.30 லட்சம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் அரசு வேலை தேடுவோருக்கு பணியிடம் பெறும் வாய்ப்பு அதிகம் உருவாகியுள்ளது.

தொழில்நுட்பம் சாராத மற்ற பணியிடங்கள் எனும் போது பாரா மெடிக்கல் ஊழியர், இளநிலை உதவியாளர், தட்டச்சு, கணக்கர், ரயில் பணியாளர், பயணச்சீட்டு பரிசோதகர், உள்ளிட்ட பணியிடங்கள் ஆகும்.

ரயில்வே துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 1.30 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அரசுப் பணிக்கு தயாராகிக் கொண்டு இருப்பவர்களுக்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மிகமிக அதிர்ஷ்டகரமான வாய்ப்பு. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆர்ஆர்பி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, கல்வி தகுதி ஆகியவை துறைசார்ந்து பணியிடத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது.

லெவல் 1 பணிக்கு - 1,00,000 
தொழில்நுட்பம் அல்லாத பணிக்கு-30,000 
மொத்தம்- 1,30,000 
தகுதி: கல்வி தகுதி துறை சார்ந்து பணியிடத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. . 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பம். 
தமிழகத்தில் பணிபுரிய விரும்புவோர் : www.rrbchennai.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். 
இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்: 
http://www.rrbcdg.gov.in/uploads/RRB%20Notice-English.pdf


Advertisement